மழையால் கைவிடப்பட்டது 2வது டி20... ரசிகர்கள் ஏமாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 04:47 pm
2nd-t20-match-abandoned-due-to-rain

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டி20 போட்டியில், மழை குறுக்கிட்டதால், போட்டி கைவிடப்பட்டது.

முதல் டி20-யில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 2வது டி20 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டு செய்ய முடிவெடுத்தது. முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்திலேயே துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச்சை '0' ரன்களுக்கு இழந்தது. அதன் பின் வந்தவர்களும் சரியாக விளையாடாததால், 6.3 ஓவர்களில் 41 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா. 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மெக்டெர்மோட் 37 ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவரைத் தவிர, அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் புவனேஸ்வர் குமார் மற்றும் கலீல் அஹ்மத் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

அதை தொடந்து மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டநேரம் குறைக்கப்பட்டு, டக்வர்த் லீவிஸ் முறைப்படி, 11 ஓவர்களில் இந்தியாவுக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், விடாமல் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close