3வது டி20: இந்தியாவுக்கு 165 இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 03:41 pm
3rd-t20-australia-set-165-target-for-india

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியா வெல்ல, இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது மற்றும் கடைசி போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. துவக்க வீரர்கள் ஷார்ட்(33) மற்றும் பின்ச்(28) நல்ல துவக்கம் தந்தாலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் க்ருனால் பாண்ட்யாவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 13 ஓவர்களில் 90 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது ஆஸ்திரேலியா. ஆனால், அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேரி 27 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 ரன்களும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close