கோலி அதிரடியில் இந்தியா அபார வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 04:53 pm
kohli-smashes-half-century-to-secure-series-tie

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டி20 தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில், கேப்டன் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, டார்சி ஷார்ட்(33), பின்ச்(28), கேரி(27) ரன்கள் அடித்திருந்தனர். இந்திய பந்துவீச்சாளர் க்ருனால் பாண்ட்யா சிறப்பாக பந்துவீசி, 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தவான்(41) மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா(23) அதிரடி துவக்கம் தந்தனர். 5 ஓவர்களில் இந்தியா 62 ரன்கள் அடித்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 1-1 என சமமாக முடிந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close