கோலியை சமாளிக்க ஆஸி வீரர்களுக்கு ஸ்மித், வார்னர் பயிற்சி

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 10:29 am
smith-and-warner-help-aussie-bowlers-combat-kohli

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சமாளிக்க ஆஸ்திரேலிய அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோர் அந்த அணியினருக்கு பயிற்சியளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.

தற்போது, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளதால், ஸ்மித் மற்றும் வார்னருக்கு வழங்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அந்நாடு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மேல்முறையீடு செய்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்ட டேவிட் வார்னர், மீண்டும் வீரர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் முன்னிலையில் வார்னர் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

 

 

இந்த போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோரை தயார் செய்ய உதவும் வகையில் வார்னர் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதே போல ஸ்மித்தும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close