இப்படியா வருவீங்க...: கேப்டன் கோலியை சாடும் ரசிகர்கள்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 08:52 am
virat-kohli-slammed-after-wearing-shorts-for-toss-at-test-warm-up

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது கேப்டன் விராட் கோலி ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு டாஸ்-ஐ எதிர்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இந்தியா - ஆஸ்திரேலிய லெவன் அணிகள் மோதும் 4 நாட்கள் பயிற்சி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறவில்லை. 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் 3 நாட்களாக குறைந்தது. 2வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 வீரர்களில் அரைசத்ததால், 358 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

போட்டி தொடங்குவதற்கு முன், இரு அணிகளின் கேப்டனும் டாஸ் போட மைதானத்துக்கு வந்தனர். அப்போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு  வந்தார். இதுகுறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.

டாஸ் போடும்போது மைதானத்திற்கு இப்படி வருவது அவமரியாதையான ஒன்று என்றும், இந்த நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close