ஆஸிக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து பிரித்வி ஷா வெளியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 11:59 am
prithvi-shaw-ruled-out-of-first-test-against-australia-in-adelaide

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இளம் வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் சமனில் முடிந்ததை அடுத்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. தற்போது 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று தொடங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது கேட்ச் பிடிக்க முயன்று இளம் வீரர் பிரித்வி ஷா காலில் காயம் ஏற்பட்டது. 

பின்னர் அவரை பிசிசிஐ மருத்துவ குழுவினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாக சில நாட்கள் ஆகும் என்பதால் முதல் டெஸ்டுக்கான இந்திய அணியில் இருந்து ஷா நீக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும் கே.எல்.ராகுல் களம் இறங்குவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close