மாஸ் காட்டிய முரளி விஜய்: ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்து அசத்தல் சதம்

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 03:55 pm

vijay-blasts-26-in-an-over-to-reach-ton

ஆஸ்திரேலியா லெவன் அணி- இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் முரளி விஜய் சதம் அடித்து அசத்தினார். அவர் ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து அசத்தி உள்ளார். 

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மூன்று டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் 4 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. 

 

— BCCI (@BCCI) December 1, 2018

 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்திய அணியின் பிரித்வி ஷா 66, புஜாரா 54, கோலி 64, ரஹானே 56,ஹனுமா விஹாரி 53, ரோகித் சர்மா 40 ரன்கள் குவிக்க 358 ரன்களை சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆர்சி ஷாட் 74, மேக்ஸ் பிரியாட் 62, ஹேரி நெல்சன் 100, ஆரோன் ஹேர்டில் 86, டேனியல் ஹேலியன் 43 என ஆஸியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாட 544 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. 

 

 

இந்நிலையில் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 62, முரளி விஜய்யின் 129 ரன்களால் இந்தியா 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து கே.எல் ராகுல், முரளி விஜய் அவுட்டான நிலையில் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என ஆஸ்திரேலியா தெரிவித்தது. இதையடுத்து பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்தது.

இதில் முரளி விஜய் 91 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர்  அடுத்த 27 பந்துகளிலேயே அவர் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடிக்க வித்திட்ட ஓவரில அவர் 4 4 6 2 6 4 என 26 ரன்கள் எடுத்து அசத்தினார். நீண்ட நாட்களுக்கு பிறகு முரளி விஜய் தனது அதிரடியை காட்டி உள்ளதாக ரசிகர்கள்கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close