ஆஸி டெஸ்ட்டில் வெற்றி பெற இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு: ஸ்டீவ்வாக்

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 01:20 pm
steve-waugh-calls-australia-tests-a-significant-chance-for-india

6ம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள நான்கு டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆறாம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இந்த முறையாவது இந்தியா தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்ப்பு ரசிகள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது.

இதனால் இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கணித்துள்ளார். இது தொடர்பாக இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கணிசமான அளவில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உண்மையிலேயே மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விராட்கோலி மிக சிறந்த பேட்ஸ்மேன். டெண்டுல்கர், லாராவை போன்று அவரும் மிகப் பெரிய வீரர்.

இந்த டெஸ்ட் தொடரில் யார் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close