ஆஸ்திரேலிய அணியுடன் சண்டையிடும் எண்ணம் இல்லை: கோலி

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 04:11 pm
virat-kohli-comments-on-india-australia-test-series

ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் சண்டையிடும் எண்ணம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலியா எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், "என்னை இனி மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் விளையாட தொடங்கும் போது எனது எண்ணம் வேறாக இருந்தது. தற்போது அணியின் வெற்றியில் தான் எனது முழு எண்ணமும் இருக்கிறது. எனவே எதிர் அணியுடன் எந்தவித மோதலுக்கும் நான் தயாராக இல்லை. நம் வாழ்க்கையில் நாம் முன்னேறி செல்லும் போது இந்த மாறுதல்கள் எல்லாம் நடக்கும்" என்றார்.

விராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும். அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அந்த அணிக்கு எதிராக தான் எடுத்தார். அதே போட்டியில் ரசிகர்களை நோக்கி தவறாக செய்கை காட்டியதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close