6 சிக்ஸர் இரட்டை சதம்; இளம் ஆஸ்திரேலியா வீரர் அட்டகாசம்!

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 04:44 am
australian-teen-hits-6-sixers-and-a-double-century

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில், இளம் வீரர் ஆலி டேவிஸ், இரட்டை சாதம் அடித்தது மட்டுமல்லாமல், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் 19 வயதிற்குட்ப்பட்ட வீரர்களுக்கான ஒருநாள் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மெட்ரோ அணியும், நாரதர்ன் டெர்ரிடரி அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில், மெட்ரோ அணியின் கேப்டனான 18 வயது ஆலி டேவிஸ், இரட்டை சதம் அடித்தார். வெறும் 115 பந்துகளில், 207 ரன்களை விளாசினார். முக்கியமாக, எதிரணி பந்துவீச்சாளர் ஜேக் ஜோன்ஸ் வீசிய 40வது ஓவரில், 6 சிக்ஸர்கள் அடித்து தெறிக்க விட்டார் டேவிஸ். இந்த போட்டியில் அவர் அடித்த மொத்தம் சிக்ஸர்களின் எண்ணிக்கை 17. 

இவரது அதிரடியால், மெட்ரோ அணி, வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு, 50 ஓவர்களில்  405 ரன்கள் எடுத்தது. எதிரணியோ, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close