கிரிஸ் கெய்லுக்கு ரூ.ஒன்றரை கோடி இழப்பீடு: மான நஷ்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

  Newstm News Desk   | Last Modified : 04 Dec, 2018 08:37 am

chris-gayle-wins-australia-masseuse-defamation-payout

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிரிஸ் கெய்லுக்கு பேர்பேக்ஸ் மான நாஷ்ட வழக்கில் ரூ. 1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது. 

இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கலம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.