ரமேஷ் பவார் பயிற்சியாளராக தொடர வேண்டும்: ஹர்மன்பிரீத், ஸ்ம்ரிதி மந்தனா கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 02:15 pm
harmanpreet-kaur-smriti-mandhana-write-to-bcci

ரமேஷ் பவாரே பயிற்சியாளராக தொடர வேண்டும் என ஹர்மன்ப்ரீத் கவூர் மற்றும் ஸ்ம்ரிதி மந்தனா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதி உள்ளனர். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தொடர்பான சர்ச்சைகள் நீண்டு வருகிறது. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் முடிந்த நிலையில் அதனை நீட்டிக்க முடியாது என்று பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் பவாரை 2021ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று டி20 அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், 'பவார், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர். அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவரே பயிற்சியாளராக தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கக்கூடாது என்று கிரிக்கெட் வீராங்கனைகள் எக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close