கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கௌதம் கம்பீர்!

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 09:43 pm

gambhir-retires-from-all-forms-of-cricket

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். இதனால், 2019 ஐபிஎல் போட்டிகளில் கம்பீர் விளையாட மாட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான துவக்க வீரர்களுள் ஒருவரான அதிரடி பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர், கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பையில், இந்திய அணியின் சிறந்த வீரராக அதிரடி காட்டிய கம்பீர், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முடிவின் காரணமாக, அவர் விளையாடமாட்டார் என உறுதி படுத்தப்பட்டுள்ளது..

வரும் 6ம் தேதி ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியோடு, கிரிக்கெட்டில் இருந்து விடைபெற போவதாக கம்பீர் அறிவித்துள்ளார்.

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4154 ரன்களையும், 147 ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்களையும் கம்பீர் குவித்துள்ளார்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.