ஆஸி அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 01:38 pm
virat-kohli-led-visitors-name-12-member-squad-for-1st-test

அடிலெய்டில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என டிராவில் முடிவடைந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை முதல் அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான இந்திய அணி 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களில் ரோஹித் சர்மா அல்லது விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெற முடியாமல் போகும்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹனுமா விஹாரி.

ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் ஃபிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close