ஆஸி. எதிரான முதல் டெஸ்ட்: திணறும் இந்திய அணி

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 08:35 am
indvaus-india-four-down-at-lunch-on-day-1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதனால் ரன் எடுக்க திணறிய இந்தியா உணவு இடைவேளையில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முன்னதாக நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இன்று முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கிறது. இந்த தொடரில் வெற்றிப்பெறும் அணிக்கு ஆலன்-பார்டர் கோப்பை வழங்கப்படும். இன்று அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருவருமே தடுமாறினர். ஹசல்வுட் வீசிய பந்தில், ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், முரளி விஜய்யும் 11 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய விராட் 3 ரன்கள் மட்டும் எடுத்து பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்தியா  4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close