ஆஸ்திரேலியா டெஸ்ட் - முதல் நாளில் இந்திய திணறல்!

  shriram   | Last Modified : 06 Dec, 2018 06:14 pm
australia-vs-india-india-struggle-on-day-1

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடிய நிலையில், புஜாராவின் சதத்தால், முதல் நாள் ஆட்ட முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை போராடி எடுத்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.

துவக்க வீர்ர் கே.எல். ராகுல்(2) மற்றும் முரளி விஜய்(11) ஆரம்பத்திலேயே அவுட்டாகி, மோசமான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய புஜாரா, நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். கேப்டன் கோலி உட்பட அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். 4வது விக்கெட்டுக்கு வந்த ரோஹித் ஷர்மா 37 ரன்கள் எடுத்தார். 246 பந்துகளில் புஜாரா 123 ரன்கள் அடித்து அசத்தினார். இது புஜாரா அடிக்கும் 16வது டெஸ்ட் சதமாகும். ஆஸ்திரேலியாவில் அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதமும் இதுவாகும். அஷ்வின் மற்றும் ரிஷப் பன்ட் தலா 25 ரன்கள் அடித்தனர். இந்தியா 250 ரன்களை தொட்டபோது, புஜாரா ரன் அவுட்டானார்.

முதல் நாள் முடிவில், இந்தியா 9 விக்கெட் இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. முஹம்மது ஷமி மற்றும் பும்ரா களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்கள் எடுக்க, ஹேசல்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close