ஆஸ்திரேலியா இப்படி ஆடி பார்த்ததே இல்லை: சச்சின் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 01:53 pm
i-ve-not-seen-before-in-my-experience-sachin-about-ausvind-test

அடிலெய்டில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணி இப்படி ஆடி தான் பார்த்ததே இல்லை என்று சச்சின் ட்வீட் செய்துள்ளார். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டிக்குறித்து சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய அணி இப்போது தன் பிடியை நழுவ விடக்கூடாது. இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.  ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு தற்காப்பு, தடுப்பு உத்தியுடன் ஆடி என் அனுபவத்தில் கண்டதில்லை.

 

 

அஸ்வின் திறமையாக பந்து வீசுகிறார். இப்போதைக்கு இந்திய அணியின் கை ஓங்கியிருக்க அஸ்வின் தான் காரணம். ஆட்டம் இப்போது மிகவும் ஓபனாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் 15-20 ஓவர்கள் புதிய பந்தில் எப்படி வீசுகிறோம் என்பது மிக முக்கியம். இதுதான் இந்த டெஸ்ட் எப்படிப் போகும் என்பதைத் தீர்மானிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close