235 ரன்களுக்கு ஆல்அவுட்டானது ஆஸி அணி: முன்னிலையில் இந்தியா

  Newstm News Desk   | Last Modified : 08 Dec, 2018 08:38 am

shami-s-double-strike-ends-australia-s-innings-at-235

அடிலெய்டில் நடந்து வரும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்தியாவை விட 15 ரன்கள் பின்தங்கி உள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. புஜாரா பொறுப்பான சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹேசல்வுட் வீசிய, ஆட்டத்தின் முதல் பந்தில் ஷமி (6) ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. 



இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களுடன் உள்ளது. ஹெட் 61, ஸ்டார்க் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய போது ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்த போது பூம்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. 

பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இன்று ஷமி சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி தற்போது 15 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close