அடிலெய்ட் மைதானத்தில் நடனமாடிய கோலி!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 01:47 pm
virat-kohli-shows-off-his-dance-moves-at-adelaide

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அடிலெய்ட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடனமாடியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 191 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த போது லேசாக மழை குறுக்கிட்டது.

மழையை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் மட்டுமே  எடுத்தது. பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட களமிறங்கியது. 

பொதுவாக மைதானத்தில் வீரர்கள் தங்களை புத்துணர்வாக வைத்துக்கொள்ள நடனமாடுவது வழக்கம். மைதானத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலி  கொஞ்சம் வெடித்து சிரித்தால் கூட அது வைரலாகும். 

 

 

அதுபோல் தற்போது அவர் 3ம் நாள் ஆட்டத்தில் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த திடீரென நடனம் ஆடினார். அது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close