தோனி சாதனையை சமன் செய்த பன்ட்!

  shriram   | Last Modified : 08 Dec, 2018 06:36 pm
pant-equals-dhoni-s-test-catches-record

இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை சமன் செய்து, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 250 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா 235 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. தற்போது, 151/3 என்ற நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில், க்வாஜா, ஹேண்ட்ஸகோம்ப், ஹெட், பெயின், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோரின் விக்கெட்களை கேட்ச் பிடித்து கைப்பற்றினர் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். 21 வயதேயான பன்ட். இதன் மூலம், ஓரே இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2009ம் ஆண்டு, நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி, 6 கேட்ச்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த இன்னிங்சில், 4 கேட்ச்களை பிடித்தால், ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சாஹாவின் (10) சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close