சதமடித்து கம்பீரமாக விடைபெறும் காம்பீர்!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 10:28 pm
gambhir-hits-ton-in-final-match

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர், ரஞ்சி ட்ராபியில் ஆந்திராவுக்கு எதிரான தனது கடைசி கிரிக்கெட் போட்டியில், சதமடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

கடந்த வாரம், தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் நட்சத்திர வீரர் காம்பீர். 2011ல் இந்தியா உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த காம்பீர், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராக பார்க்கப்படுகிறார். ரஞ்சி ட்ராபியில் தனது சொந்த ஊர் டெல்லி அணிக்காக விளையாடி வந்து காம்பீர், ஆந்திராவுக்கு எதிராக விளையாடும் போட்டியே தனது கடைசி போட்டி என அறிவித்திருந்தார். 

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆந்திரா அணி, 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து டெல்லி அணி களமிறங்க, துவக்க வீரரான காம்பீர் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக, சதமடித்து அசத்தினார். 2வது நாள் ஆட்ட முடிவில் 92 ரன்கள் எடுத்திருந்த காம்பீர், இன்று, பர்ஸ்ட் க்ளாஸ் போட்டிகளில் தனது 43வது சதத்தை பூர்த்தி செய்தார். 112 ரன்கள் எடுத்திருந்த போது, காம்பீர் அவுட்டானார். மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷங்கள் எழுப்பி, காம்பீருக்கு மரியாதை செலுத்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close