அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 10:50 am
india-set-australia-323-for-victory-in-first-test

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்திய -ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா அணி 235 ரன்களுக்கும் எடுத்து ஆட்டம் இழந்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேனான புஜாரா 71 ரன்கள் மற்றும் ரஹானே 70 ரன்கள் சேர்த்தனர். தொடா்ந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து மளமளவென சரிந்ததால் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close