2வது டெஸ்ட்: டாஸ் வென்றது ஆஸ்திரேலியா ; இந்தியா பந்துவீச்சு

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 07:51 am
2nd-test-australia-win-the-toss-and-elect-to-bat

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் கிரீன் பிட்ச்சில் இன்று தொடங்கியிருக்கும் இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா பேட்டிங்கில் பலம் இழந்து காணப்படுகிறது. இன்று பெர்த்தில் தொடங்கும் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். பெர்த் பிட்சில் ஏற்கனவே பவுன்ஸ், வேகம் இருக்கும். தற்போது அதிக அளவில் புற்களுடன் காணப்படுகிறது. க்ரீன் பிட்ச்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close