2வது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலியா 277/6

  Newstm Desk   | Last Modified : 14 Dec, 2018 05:25 pm
2nd-test-australia-score-277-6-in-first-day

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, நல்ல துவக்கம் பெற்றது. துவக்க வீரர்கள் ஹாரிஸ் மற்றும் பின்ச், முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த பின்ச், பும்ரா பந்தில் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் க்வாஜா, உமேஷ் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

துவக்க வீரர் ஹாரிஸ் 70 ரன்கள் எடுத்திருந்த போது, விஹாரி பந்தில் அவுட்டானார். மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்து, 5வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த மார்ஷ் விக்கெட்டை விஹாரி வீழ்த்தி, ஆஸ்திரேலியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுத்தார். முதல் நாள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில், இஷாந்த் ஷர்மா மற்றும் ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close