இந்தியாவுக்குதான் வேல்டுகப்: அடித்து சொல்கிறார் கங்குலி!

  Newstm Desk   | Last Modified : 15 Dec, 2018 11:49 am
india-will-surly-win-worldcup-ganguly

 பிரிட்டனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி  உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், பிரிட்டனில் அடுத்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உலகக் கோப்பை, கடந்த மாதம் 30 - ஆம் தேதி (நவ.30) இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. முதலாவதாக டிசம்பர் 2 -ஆம் தேதி மும்பையிலும், டிசம்பர் 8 -ஆம் தேதி பெங்களூரிலும், அதைத்தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவிலும் உலகக்கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டது.

இறுதியாக வரும் 23 -ஆம் தேதி டெல்லியை அடுத்த குருகிராமத்தில் கோப்பை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

கொல்கத்தாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உலகக் கோப்பையை பார்த்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஐசிசி 2019 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. நமது இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறது" என கங்குலி தெரிவித்தார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close