நடுவரின் தவறான முடிவால் விக்கெட்டை இழந்த கோலி

  Newstm Desk   | Last Modified : 16 Dec, 2018 02:44 pm
virat-kohli-gets-out-via-a-controversial-catch-on-123

2வது டெஸ்ட் கிரிக்கெட்டின் மூன்றாவது நாளில் நடுவரின் தவறான முடிவால் கோலியின் விக்கெட் பறிபோனது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

பெர்த் மைதானத்தில் இன்று நடந்த 2 டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணி 251-6 விக்கெட் எடுத்திருந்த போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை கேப்டன் கோலி எதிர்கொண்டார். 

அது ஸ்லிப்பில் இருந்து ஹேண்ட்ஸ்கோம்ப்பின் கையில் சிக்கியது. மிகவும் நம்பிக்கையோடு ஹேண்ட்ஸ்கோம்ப் விக்கெட் என்று கத்தி கொண்டாட தொடங்கினார். அதே போல கோலியும் அது விக்கெட் இல்லை என்ற நம்பிக்கையோடு களத்தல் நின்றார். ஆனால் மூன்றாவது நடுவர் அதனை விக்கெட் என அறிவித்தார். பெரிய ஸ்கீரின் காட்டும் போது ஹேண்ட்ஸ்கோம்ப் பிடித்த பந்து தரையில் படுவது தெரிகிறது. 

சதம் கடந்து 123 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டு இருந்த கோலியின் விக்கெட் இவ்வாறு  நடுவரின் தவறான தீர்ப்பால் பறிப்போனது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இருந்தாலும் இது போன்ற சூழ்நிலைகளில் ஆன்-ஃபீல்ட் நடுவர் கூறும் முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும் என்று ஹர்ஷா போக்லே போன்ற கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close