கம்பீரின் சாதனைகளை புகழ்ந்து தள்ளியுள்ள மோடி!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 06:15 pm
pm-narendra-modi-lauds-gautam-gambhir-s-contributions-to-cricket-and-social-causes

கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற இந்திய அணி வீரர் கௌதம் கம்பீருக்கு பாராட்டு கடிதம் எழுதி, பிரதமர் நரேந்திர மோடி அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை பேட்ஸ்மேனாக வலம் வந்த கௌதம் கம்பீர்,  கிரிக்கெட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வுபெறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தம்மை பாராட்டி பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தை கௌதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்புக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணி பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் உங்களின் பங்களிப்பை இந்த தேசம் என்றும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கும்.

குறிப்பாக, 2007-இல் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக  54 பந்துகளில் 75 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளீர்கள்.

அதேபோன்று, 2011 -இல் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 122 பந்துகளில் 97 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக் கனியை பறிக்க வித்திட்டீர்கள்.

கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும், அர்ப்பணிப்பு மற்றும் மனஉறுதியை மட்டும் எப்போதும் நீங்கள் கைவிட்டதில்லை. இதனால்தான் அணியில் இடம்பெற்ற குறுகிய காலத்திலேயே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி உங்களால் சாதிக்க முடிந்தது.

கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பது,  ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்பது என உங்களின் சமூக அக்கறையை எண்ணி வியக்கிறேன். பிரபலங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது என தமது கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close