2வது டெஸ்ட்: மீண்டும் ஓப்பனிங் சொதப்பல்; இந்தியா போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 06:03 pm
2nd-test-indian-openers-disappoint-again-112-5

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா 274 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், 2வது இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்களும், இந்தியா 283 ரன்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்சில், ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி பந்தில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். அதிகபட்சமாக அந்த அணியின் கவாஜா 72 ரன்களை எடுத்தார். ஷமி 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 2வது இன்னிங்சில் 243 ரன்களை எடுத்து, 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. 

தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் மீண்டும் சொதப்பினர். இந்தமுறை ராகுல் டக்கவுட்டாக, முரளி விஜய் 20 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். கேப்டன் கோலி 17 ரன்களில் அவுட்டாக இந்தியா திணறியது. அடுத்து வந்த ரஹானே(30), ஹனுமா விஹாரி(24) ஜோடி நிதானமாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தனர். 4வது நாள் ஆட்ட முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஹேசல்வுட் மற்றும் நேதன் லியோன் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். 

5 விக்கெட்கள் மட்டுமே கையில் உள்ள நிலையில், கடைசி நாளில் இந்தியா 175 ரன்கள் எடுக்க வேண்டும். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close