2023 உலகக் கோப்பை உரிமை பறிக்கப்படும் - பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 04:49 am
india-could-lose-2023-world-cup-rights-for-not-compensating-icc

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையில், ஐசிசிக்கு கிடைக்காமல் போன வரி விலக்கை ஈடு செய்யாவிட்டால், 2023ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான உரிமை ரத்து செய்யப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.

2016ம் ஆண்டு, டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இந்தியாவில் இந்த தொடர் நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்குவழங்குவார்கள் என ஐசிசி நம்பி இருந்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த வரிவிலக்கு இழப்புக்கு பிசிசிஐ ஈடுகட்ட வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டிருந்தது. 23 மில்லியன் டாலர்கள் அதாவது, 671 கோடி ரூபாயை இந்த வரிவிலக்குக்கு பதில் பிசிசிஐ வழங்க வேண்டும் என ஐசிசி கூறியது. ஆனால் அதை தர பிசிசிஐ மறுத்துவிட்டது.

இதுகுறித்து கேட்டபோது இரண்டு தரப்புக்கும் இடையே நடைபெற்ற ஒரு சந்திப்பில் பிசிசிஐ இந்த தொகையை தர ஒப்புக் கொண்டதாக ஐசிசி கூறுகிறது. ஆனால் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று பிசிசிஐ மறுத்துவிட்டது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த உரிமை வழங்கப்பட்டிருந்தது. 161 கோடி ரூபாயை தங்களுக்கு ஈடு கட்டாவிட்டால், உலகக் கோப்பை உரிமம் ரத்து செய்யப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close