சான்டா கிளாஸ் வேடத்தில் சச்சின் - நல வாழ்வு மையத்தில் இன்ப அதிர்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 26 Dec, 2018 01:34 pm
sachin-tendulkar-turns-santa-claus-to-surprise-young-kids-at-a-ngo-on-christmas-day

கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்த கிறிஸ்துமஸ் நாளில் குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் இருக்கும் குழந்தைகள் முன் 'சான்டா'வாக தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

சான்டா கிளாஸ் வேடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக குழந்தைகள் நல வாழ்வு மையத்திற்கு விசிட் செய்த சச்சின் அங்கிருக்கும் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி, அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை பரிசாக அளித்து, ஆடி - பாடி மகிழ்ந்திருக்கிறார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சச்சின், "ஹூ...ஹூ.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். அஷ்ரே சிறுவர் பராமரிப்பு மையத்தில் இருக்கும் இந்த இளைஞர்களுடன் பழகுவதே ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களுடைய அப்பாவி முகங்களின் மகிழ்ச்சி விலைமதிப்பற்றதாக இருந்தது" எனத் தெரிவித்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close