நீங்க என்ன நெனச்சா எனக்கென்ன?: விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 26 Dec, 2018 05:10 pm
not-here-to-change-perceptions-captain-virat-kohli

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பத்திரிகைகளில் தன்னை பற்றி எழுதப்படுவது குறித்து கவலைபட்டதில்லை என்றும், யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. மைதானத்தில் கோபப்படுவது, ஆக்ரோஷமாக விளையாடுவது துவங்கி, சமீபத்தில் ட்விட்டரில் ரசிகரை கண்டித்தது வரை, அடிக்கடி ஊடகங்களில் கோலி விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின், மைதானத்தில் வைத்து, இந்திய வீரர் முரளி விஜய்யிடம், "எப்படி கோலி போன்ற ஒரு ஆளை உங்களுக்கு பிடிக்கிறது" என கேட்டார். இந்த உரையாடலின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலியிடம், அவர் மீதுள்ள 'பேட் பாய்' இமேஜ் பற்றியும், அவர் பற்றி ரசிகர்களிடையே உள்ள தவறான பிம்பம் பற்றி என்றாவது வருத்தப்பட்டது உண்டா என்றும் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர், நான் என்ன செய்கிறேன். என்ன நினைக்கிறன் என உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. இது அனைத்தும் வெளியே நடப்பதாகும். அதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரவர் விருப்பம். எனது விருப்பம் சிறப்பாகி விளையாடி, அணிக்கு வெற்றி தேடித் தரவேண்டும் என்பதாகும்" என்றார் கோலி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close