3வது டெஸ்ட்: 4ம் நாள் முடிவில் 141 ரன்கள் முன்னிலையில் இந்தியா

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 02:45 pm
cummins-leaves-india-a-whisker-away-from-victory

மெல்போர்னில் நடந்து வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4வது நாளான இன்று ஆஸ்திரேலியா அணி 258/8 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது இந்தியா 141 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி அணி, 151 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தடுமாறிய இந்திய அணி 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது. 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழக்க தொடங்கியது. இந்நிலையில் 4வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 258/8 ரன்கள் எடுத்திருந்தது. 

தற்போது இந்தியா 141 ரன்கள் முன்னிலையில் வெற்றியின் விளிம்பில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close