ஆஸ்திரேலியாவை சோலோவாக தாங்கி நிற்கும் கம்மின்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 08:11 pm
pat-cummins-takes-charge-against-india

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவை சோலோவாக தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ். 

ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ், 3வது டெஸ்ட் போட்டியில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசினாலும் அதிக விக்கெட்களை அவர் வீழ்த்தவில்லை. ஆனால், 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில், இந்திய பேட்ஸ்மேன்களை தனது வேகத்தால் திணறவைத்தார். ஏற்கனவே 292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியது. 400 ரன்களுக்கும் மேல் இலக்காக நிர்ணயம் செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், கம்மின்ஸ் அட்டகாசமாக பந்துவீசி, அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினார். 

விஹாரி, புஜாரா, கோலி, ரஹானே என முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த மயங்க் அகர்வாலின் விக்கெட்டையும், ஜடேஜாவின் விக்கெட்டையும் பின்னர் வீழ்த்தினார் கம்மின்ஸ். தற்போது 399 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியபோது, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கம்மின்ஸ், இந்தியாவுக்கு பேட்டிங்கிலும் நெருக்கடி கொடுத்தார். 242 ரன்கள் தேவைப்படும் நிலையில், 4 விக்கெட்டுகள் மிச்சமிருக்கும் போது கம்மின்ஸ் களமிறங்கினார். சோலோவாக நின்று, இந்திய வேகப்பந்தை சமாளித்து அரைசதம் கண்டார். 4ம் நாள் ஆட்டநேரம் முடியும் போதும், கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் அவரை இந்திய பந்துவீச்சாளர்களால் வீழ்த்தமுடியவில்லை. 

கையில் இரண்டு விக்கெட்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு 141 ரன்கள் என்ற இமாலய இலக்கு தேவைப்படும் நிலையில், 61 ரன்களுடன் கம்மின்ஸ் களத்தில் உள்ளார். நாளையும் கம்மின்ஸின் அதிரடி தொடருமா? பார்க்கலாம்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close