இந்தாண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்கள் எடுத்து அசத்தி உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3வது டெஸ்ட்டை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த ஃபார்மட்டில் அணிமுகமானார்.
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வரும் இவர் மொத்தமாக இந்தாண்டு 48 விக்கெட்களை எடுத்துள்ளார். முன்னரே அறிமுக ஆண்டில் அதிக விக்கெட்கள் எடுத்து 39 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 9 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.
Success isn't always about greatness. It's about consistency.😁
A dream win for us and what a way to end the year! 🇮🇳
Truly exceptional.#AUSvsIND pic.twitter.com/6Kaiy46v4O— Jasprit bumrah (@Jaspritbumrah93) December 30, 2018
இதுகுறித்து அவர் கூறும் போது, "டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்து விளையாட வேண்டும் என்று தான் எப்போதும் நினைப்பேன். ஒருநாள் நாம் விக்கெட் எடுப்போம். சில நாட்களில் மற்றவர்கள் எடுப்பார்கள். அதைப்பற்றி எல்லாம் யோசிப்பதில்லை" என்றார்.
newstm.in