ஐசிசி தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் தொடரும் கோலி!

  Newstm Desk   | Last Modified : 31 Dec, 2018 07:48 pm
icc-rankings-kohli-maintains-top-spot

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். 3வது போட்டிக்கு பின்னர், டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், விராட் கோலி தனது நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளார். மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 82 ரன்கள் அடித்த கோலி, இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட்டானார். இதனால், அவருக்கு மூன்று புள்ளிகள் குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை தாண்டி, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் கோலி. 2018ம் ஆண்டில் 1,322 ரன்களை கோலி அடித்துள்ளார். முதல் இடத்திற்கு வந்த விராட் கோலி தற்போது வரை முதலிடத்தை தன்னிடமே தக்கவைத்துக் கொண்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு, 937 புள்ளிகள் பெற்று, அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார்.

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறார். 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சனை விட ரபாடா வெறும் 6 புள்ளிகள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் டாப் ஸ்கோரரான  இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 4வது இடத்திலும், ரிஷப் பன்ட் 38 வது இடத்தையும் பிடித்துள்ளனர். தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் மூன்றாவது டெஸ்டில் 76 மற்றும் 42 ரன்கள் எடுத்த நிலையில் 67வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்

மூன்றாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 28வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close