ஆஸ்திரேலிய அணியின் தேர்வு ரொம்ப மோசம்: கங்குலி நக்கல்

  Newstm Desk   | Last Modified : 01 Jan, 2019 05:54 am
australian-selection-at-lowest-point-ganguly

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் தேர்வு முறை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி விமர்சித்துள்ளார்.

இந்தியா -ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்துள்ளது. சரியான பேட்டிங் பார்ட்னர்ஷிப் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி தவித்து வருகிறது. இந்நிலையில் 4வது மற்றும் கடைசி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் தேர்வின் மீது அனைவரின் கவனமும் உள்ளது.

தொடரை சமன் செய்வதற்காக ஆஸ்திரேலிய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும், என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக், கடைசி டெஸ்ட் போட்டிக்கு தாங்கள் விரும்பும் ஆட்ட லெவன் அணியை தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இதை குறிப்பிட்டு ட்விட்டரில் எழுதிய முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, "ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வு குழுவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முன்னாள் ஜாம்பவன்கள், ஆட்ட லெவன் குறித்து தங்கள் இன்ஸ்ட்டாகிராம் மூலம் தேர்வுக்குழுவுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" எழுதியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close