டிம்மை கலாய்த்தது நீங்கள் தானே: பன்ட்டை கேட்ட ஆஸி. பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 10:32 am
scott-morrison-takes-cheeky-crack-at-sledging-indian-keeper

புத்தாண்டு விருந்தின் போது,  டிம்மை கலாய்ததது நீங்கள் தானே என பன்ட்டை கிண்டல் செய்தார் ஆஸ்திரேலிய பிரதமர். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் நேற்று புத்தாண்டு விருந்தளித்தார். இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது பாரம்பரிய நீல நிற உடையுடன் இதில் பங்கேற்றனர். இந்த விருந்தில் தனித்தனியாக இந்திய வீரர்களை வரவேற்ற ஆஸ்திரேலிய  பிரதமர், ரிஷப் பன்ட்டை பார்த்தும் "டிம்மை கலாய்ததது நீங்கள் தானே" என்று விளையாட்டாக கேட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close