சச்சினை உருவாக்கிய பயிற்சியாளர் காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 02 Jan, 2019 08:47 pm
sachin-tendulkar-s-coach-ramakant-achrekar-passes-away-in-mumbai

சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளராக இருந்த ராமாகந்த் அச்ரேக்கர்  இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.

கிரிக்கெட் உலகின் கடவுளாக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்று,  டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

இவர் சிறுவனாக இருக்கும்போது ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்றார். இவர் குறித்து சச்சின் பல முறை பேசியுள்ளார். இவருக்கு மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் பெற்றுள்ளார். 87 வயதாகிய ராமாகந்த் அச்ரேக்கர் மும்பையின் இன்று காலமானார்.

இவரது மறைவு குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close