9 மணி நேரம் களத்தில் நின்ற புஜாரா: சங்ககாரா பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 09:42 am
a-great-lesson-to-all-batsmen-in-the-series-and-tests-in-general-sanga-praises-pujara

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிதானமாக விளையாடி 193 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்த புஜாராவின் ஆட்டம் பல பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பாடம் என்று சங்ககாரா பாராட்டி உள்ளார். 

சிட்னி நகரில் அஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய 450 ரன்களை கடந்த இமாலய ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த போட்டியில் இந்தியாவின்  சத்தீஸ்வர் புஜாரா 9 மணி நேரம் களத்தில் இருந்து 373 பந்துகளை சந்தித்து 193 ரன்கள் எடுத்தார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விக்கெட்டை இழந்ததை ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் அவரது பொறுமையையும் நிதானமான ஆட்டத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா தனது ட்விட்டர் பக்கத்தில் புஜாராவை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார். 

அவர் தனது ட்வீட்டில், "இந்த தொடரின் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது. சத்தீஸ்வர் புஜாரா தனது அட்டத்தின் மூலம், ஒருவர் தனது பலத்தின் மேல் நம்பிக்கை வைப்பதாலும், தொடர்ந்து கவனம் செலுத்தி விளையாடுவதாலும் என்ன நடக்கும் என்பதை காட்டி உள்ளார்" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close