இதெல்லாம் ஒரு டீமா? கடுப்பான ஷேன் வார்னே!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 06:23 pm
shane-warne-fires-at-ridiculous-aussie-selection-for-odi

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையில் உள்ள ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடருக்காக தேர்ந்தெடுத்துள்ள அணியை, அந்நாட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி, 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 4வது டெஸ்ட் போட்டியிலும், முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது இந்தியா. இந்த நிலையில், ஆஸ்திரேலியா ரசிகர்கள் ஒருநாள் தொடரையாவது தங்கள் அணி கைப்பற்றுமா, என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதற்கிடையே, ஆஸ்திரேலியா கிரிக்கெட் தேர்வு கமிட்டி, ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்தது. ரசிகர்கள் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலர் ஒருநாள் தொடருக்கான அணியை கடுமையாக விமர்சித்துள்ளனர். சிறப்பான வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாமல் தேர்வு கமிட்டி ஒருசிலரை பழிவாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் எழுதிய முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, "தற்போது தான் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி அறிவிப்பை பார்த்தேன். விடுக்கப்பட்டுள்ள சில வீரர்களையும், சேர்க்கப்பட்டுள்ள சில வீரர்களையும் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இதில் எந்த அர்த்தமும் இல்லை" என எழுதினார். இதுபோன்ற மோசமான தேர்வுகளை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், அவரே, தான் விரும்பும் 15 வீரர்கள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டார். 

ஷான் மார்ஷ், மெரிடித், பேட்டின்சன், அகர் உள்ளிட்ட வீரர்களை வார்னே தான் விரும்பும் அணியில் சேர்த்திருந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close