புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை பல: பன்ட் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 05:20 am
there-is-a-lot-to-learn-from-pujara-pant

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், தொடரிலேயே அதிகபட்ச ரன்கள் அடித்துள்ள புஜாராவிடம் இருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது, என பாராட்டினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஏற்கனவே இரண்டு முறை சதம் அடித்த புஜாரா, கடைசி டெஸ்டிலும் 193 ரன்கள் விளாசினார். தொடர்ந்து வந்த ரிஷப் பன்ட், தனது பங்குக்கு 159 ரன்கள் அடித்து இந்திய அணி மிக வலுவான ஸ்கோரை எட்ட உதவினார்.

இந்த நிலையில், புஜாராவுடனான பார்ட்னர்ஷிப் மற்றும் அவரது சிறப்பான ஆட்டம் குறித்து பேசியபோது, "எனக்கு எந்த பெரிய மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், பேட்ஸ்மேனுடன் இந்த முறை நான் விளையாடினேன். பல போட்டிகளில் நான் விளையாடும்போது கடைசியாக களமிறங்குபவர்களுடன் தான் விளையாடுவேன். அதனால் அதற்காக நான் வேறு மாதிரி சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆனால், ஒரு பேட்ஸ்மேனுடன் ஜோடி போட்டு விளையாடும் போது, அது வித்தியாசமானது. அதைத்தான் இன்று நீங்கள் பார்த்தீர்கள். யாராவது ஒரு பேட்ஸ்மேன் ஃபார்ம் இல்லாமல் சிரமப்படும் போது, புஜாராவை பார்த்தால் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் " என்று கூறினார் பன்ட்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close