ரிஷப் பண்ட் இன்னொரு ஆடம் கில்கிரிஸ்ட்: ரிக்கி பாண்டிங்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:45 pm
he-is-sort-of-like-another-adam-gilchrist-ricky-ponting-on-rishabh-pant

ஆடம் கில்கிரிஸ்ட் போன்ற வீரர் ரிஷப் பண்ட் என்று ரிக்கி பாண்ட்டிங் புகழ்ந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் 153 ரன்கள் எடுத்து அசத்தினார். இது பண்ட்டின் 2வது டெஸ்ட் சதமாகும். வெறும் 9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள அவர் வரும் நாட்களில் பெரிய பேட்ஸ்மேனாக வருவார் என்று  கிரிக்கெட் விமர்சகர்கள்  பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ஐபில் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங், இத்தொடரில் பண்ட்டின் சிறப்பான ஆட்டம் குறித்து பேசி உள்ளார். 

அவர், "பண்ட்டுக்கு இது தொடக்கம் மட்டுமே என்று நான் நம்புகிறேன். அசலான திறமைக் கொண்டவர் பண்ட். கேம் சென்ஸ் என்பது அவரிடம் சிறப்பாக இருக்கிறது. 

தற்போதே அவர் இரண்டாவது டெஸ்ட் அடித்துவிட்டார். மூன்று ஃபார்மெட்களிலும் இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். 21 வயதாகி இருக்கும் பண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இன்னும் அவருக்கான காலம் இருக்கிறது.

அவர் தனது கீப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் நடந்துவிட்டால் அவர் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்வார். நாம் எப்போதும் தோனி பற்றியும், அவர் கிரிக்கெட்டில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தையும் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் அவர் 6 டெஸ்ட் கிரிக்கெட் சதங்களை மட்டும் தான் அடித்துள்ளார். ஆனால் பண்ட் இன்னும் நிறைய டெஸ்ட் சதங்களை அடிப்பார். இவர் ஆடம் கில்கிரிஸ்ட் மாதிரியான வீரர்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close