சிட்னி டெஸ்ட்: இந்தியாவை விட 386 ரன்கள் பின்தள்ளி உள்ளது ஆஸி!

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 01:10 pm
australia-trail-by-386-runs

சிட்னியில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. 

சிட்னி நகரில் அஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியத.

3வது நாள் ஆட்டமான இன்று தொடக்கம் முதல் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிக்க தடுமாறியது. இந்திய அணி வீரர்கள் இந்த இன்னிங்சில் 83.3 ஓவர்களில் வெறும் 6 எக்ஸ்டிரா ரன்கள் மட்டுமே கொடுத்து மிக சிறப்பாக பந்து வீசினார். 

ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஹாரிஸ் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவின் குல்திப் யாதவ் 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும், ஷமி 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். 

ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் எடுத்திருந்த போது மழைக்குறுக்கிட்டதால், இன்றைய ஆட்டம் அதோடு நிறுத்தப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் பின்தங்கி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close