கோலியின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லை - கே.எல்.ராகுல்

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 06:12 pm
kohli-needs-a-vacation-kl-rahul

இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதுமே வேலை வேலை என சுற்றித் திரிவதாகவும், அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விடுமுறை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் கலந்துகொண்ட 'காபி வித் கரண்' என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில் அவரிடம் எந்த வீரர் ரொம்ப டென்ஷனானவர் என  தொகுப்பாளர் கேட்டதற்கு, விராட் கோலி தான் என பதிலளித்தார் ராகுல். "கோலி தான். அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வேண்டும். நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு. விடுமுறை மூடிலேயே இருக்க மாட்டார். எப்போது பார்த்தாலும் வேலை வேலை வேலை என இருப்பார்" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் ராகுலுடன், மற்றொரு இந்திய வீரர் ஹர்டிக் பாண்ட்யாவும் கலந்து கொண்டிருந்தார். 

மிகவும் ஃபிட்டானவர் யார், ரொம்ப ரொமான்டிக்கானவர் யார், அதிகமாக சேட்டை செய்பவர் யார், என எல்லா கேள்விகளுக்கும் விராட் கோலி என்றே பதில் வந்தது. யார் சிறந்த கேப்டன் என்றதற்கு மட்டும் தோனியின் பெயரை இருவரும் தேர்ந்தெடுத்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close