கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதம்!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 06:13 am
final-test-4th-day-delayed-by-rain

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, மழையின் காரணமாக ஆட்டம் தாமதமாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி, நேற்று மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.

களத்தில் ஹேண்ட்ஸகோம்ப் மற்றும் கம்மின்ஸ் இருக்கும் நிலையில், விறுவிறுப்பான நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்க இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி தாமதமாகியுள்ளது. ஃபாலோ ஆனை தவிர்க்கும் நோக்கத்தில் ஆஸ்திரேலியா விளையாடி வரும் நிலையில், மழையால் ஆட்டம் தாமதமானது, அந்த அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த நிலை நீடித்தால், போட்டி டிரா ஆகி, இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close