ரோஹித் சர்மாவின் மகள் பெயர்  "சமைரா"!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:00 pm
samaira-rohit-sharma-daughter-s-name

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹி்த் சர்மா, தனது செல்ல மகளுக்கு "சமைரா" எனப் பெயர் சூட்டியுள்ளார்.

ரோஹித் சர்மா -ரித்திகா தம்பதிக்கு கடந்த  ஞாயிற்றுக்கிழமை (டிச.30) மும்பையில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய ரோஹித், தனது மனைவி மற்றும் தமது வாழ்வின் புதுவரவான மகளுடனே அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நேற்று நாள் முழுவதும் உனது அருகிலேயே அமர்ந்து கொண்டு நீ கண்விழிக்கும் அந்த அற்புத நிமிடங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஒரு கட்டத்தில் இருப்புக் கொள்ளாமல் உன் உறக்கத்தை கலைக்கவும் முயன்றேன். இந்த அருமையான தருணம் என் வாழ்நாளில் மறக்கவே மறக்காது என் அன்பு மகள் சமைரா!" என தமது மகிழ்ச்சியை ரோஹித் வெளிப்படுத்தியுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close