31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் செய்யும் ஆஸ்திரேலியா!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:17 pm
australia-forced-to-follow-on-at-home-after-31-years

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை தொடர்ந்து, 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் செய்துவருகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி, பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. 2-1 என ஏற்கனவே டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் டிராபியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொடரை சமன் செய்ய முனைப்பாக இருந்த ஆஸ்திரேலியாவுக்கு, 622 ரன்களை முதல் இன்னிங்சில் விளாசி ஷாக் கொடுத்தது இந்தியா. 

ஆஸ்திரேலியாவையும் முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர் இந்திய வீரர்கள். இதைத் தொடர்ந்து, கடைசி போட்டியையும் கைப்பற்றும் நோக்கில், இந்திய கேப்டன் கோலி, ஆஸ்திரேலியாவை ஃபாலோ ஆன் செய்ய வைக்க முடிவெடுத்தார். பொதுவாகவே கடந்த சில ஆண்டுகளில் ஃபாலோ ஆன் முறை, தங்கள் அணியின் வெற்றிக்கே பாதகமாக அமைவதால், பல கேப்டன்கள் எதிரணிகளை ஃபாலோ ஆன் செய்ய சொல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடைசி நாளில் ஆஸ்திரேலியா 322 ரன்களையும் தாண்டி, இந்தியாவை தோற்கடிப்பது முடியாத காரியம் என்பதால், கோலி ஃபாலோ ஆன் செய்ய முடிவெடுத்துள்ளார்.

கோலியின் இந்த முடிவால், 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் 1988ம் ஆண்டு, இங்கிலாந்து அணி, இதே சிட்னி மைதானத்தில் வைத்து ஆஸ்திரேலியாவை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2005ம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் செய்திருந்தது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close