64 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த குல்தீப் யாதவ்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 05:35 am
kuldeep-yadav-makes-history-with-5-wicket-haul

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் 5 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 64 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி போட்டியில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் 622 ரன்களை இந்தியா அடிக்க, ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முக்கிய விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். இடதுகை சைனாமேன் ஸ்டைலில் பந்துவீசும் குல்தீப் யாதவ், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை எடுப்பது இது இரண்டாவது முறை என்றாலும், ஆஸ்திரேலியாவில் அவரது பெர்பார்மன்ஸ் சரித்திரம் படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், இடதுகை சைனாமேன் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 5 விக்கெட்டுகள் எடுப்பது, இதுவே இரண்டாவது முறை. 64 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ஜானி வார்டில், இடதுகை சைனாமேன் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை தற்போது குல்தீப் சமன் செய்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close