சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்: இறுதிநாள் ஆட்டம் மழையால் தாமதம்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 08:50 am
india-australia-test-cricket-delayed-by-rain

சிட்டினியில் நடைபெற்றுவரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.

சிட்டினியில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதைதொடர்ந்து  விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது, இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  

முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி  2 -க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close