இளம் படையால் கிடைத்த வெற்றி! கேப்டன் கோலி பெருமிதம் 

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 11:00 am
kholi-speech-about-victory

‛ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்றது, மிகப் பெரிய வரலாற்று சாதனை’ என குறிப்பிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இதன் மூலம், இந்திய அணிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரை, 2 - 1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில், இதுவரை இந்தியா மட்டுமல்லாது, ஆசியாவை சேர்ந்த எந்த ஒரு அணியின் கேப்டனும் செய்யாத சாதனையை படைத்துள்ளார், இந்திய கேப்டன் விராட் கோலி. 

இந்த வெற்றி குறித்து, கேப்டன் கோலி கூறியதாவது:
இளம் வீரர்களின் அசாத்திய திறமையால் இந்த வெற்றி கிட்டியுள்ளது. எவரும் சாதிக்காததை நாங்கள் சாதித்துள்ளோம். இது போன்ற திறமையான வீரர்களை வழிநடத்தியதில் பெருமை அடைகிறேன். 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் போட்டியில் உலக கோப்பை வென்றபோது, வயதில் நான் மிகவும் சிறியவனாக இருந்தேன். மூத்த வீரர்கள் பலரும் அப்போது உணர்சிவத்துடன் காணப்பட்டனர்.

அவர்கள் அன்று ஏன் அப்படி இருந்தார்கள் என்பதை தற்போது என்னால் உணர முடிகிறது. என் வாழ்நாளில் செய்த மிகப் பெரிய சாதனையாகவும், மிகச் சிறந்த வெற்றியாகவும் இதை கருதுகிறேன். 

நம் அணியில் மிகவும் இளம் வயதுடைய வீரர்கள் இருப்பதால், இந்த வெற்றி, எதிர்காலத்தில் அணியை மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இது ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது என்று கோலி கூறினார்.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close